Booking Air Tickets for Travel within India (from Abroad)

Our Vacation To The Florida Keys

Source: snapjudge.wordpress.com — Saturday, July 09, 2011
”புனே… ரெண்டு டிக்கெட் கொடுங்க மேடம்” செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்; தாதர் எக்ஸ்பிரஸ்; முன்னாடி இருபத்தி ஏழு பேர் நிற்கும் க்யூவில் காத்திருந்து, அதன் பின் உங்கள் வாய்ப்பு வரும்போது பதினேழு நிமிட காபி இடைவேளைக்கு ஒற்றைக்கால் மாற்றி தவமிருந்து, சரியான சில்லறை சரி பார்த்து, ஜேப்படி திருடர்களிடமிருந்து அந்த சில்லறை பணத்தைப் பாதுகாத்து, ரெனால்ட்ஸ் ஓசி வாங்கும் சாக்கில் நடுவில் நுழையும் கல்லுளிமங்கனை – விடாக்கண்டராக துரத்தி அடித்து, கடன் கொடுத்த பேனாவை திரும்பப் பிடுங்கி பத்திரபடுத்தி ஒளித்து வைத்து… இந்த மாதிரி ஒத்த கவலை கூட இல்லாத இண்டெர்நெட் யுகம் இது. கூகிள் திறந்தோமோ… India domestic Flights தேடினோமா… புக் செய்தோமா… என்று முடிய வேண்டிய இரண்டு நிமிட காரிய உலகம். கலிகாலம். முதலில் மேக் மை ட்ரிப்.காம் வந்தது. விமானம் தேர்ந்தெடுத்து, ஊர்/பேர்/விலாசம்/பிறந்த நாள், நட்சத்திரம், லக்கினத்தில் மாந்தியை அங்காரங்கன் பார்ப்பதையும் நீச பங்க ராஜயோகத்தையும் சொல்லி முடித்தபிறகு, கிரெடிட் கார்ட் கேட்டார்கள். கேட்ட விவரம் எல்லாம் கொடுத்தாலும் செக்யூர் ஸ்வீட்.நெட் அனுப்பி வைத்தார்கள். பெயரைப் பார்த்தால் கொள்ளையர் கூட்டம் மாதிரி தெரிகிறதே என்று காபந்து கலந்த முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக பின்புல ஆராய்ச்சி செய்ய ஆசை. முகப்பு பக்கம் சென்றால் ’எங்கள் உள்ளம் வெள்ள மனசு’ என்று வெத்துப் பக்கமாக காட்டினார்கள். ‘இது யாருடைய தளம்?’ என ஹூ – இஸ் இட்டுப் பார்த்தால் Registrant: cyota yaron shohat சர்வ நிச்சயமாகத் திருடர்கள் என்பதை ஓஜே சிம்ஸனிடம் கேசி அந்தோனி உரைப்பது போல், `கோ’வின் அம்ஜலைப் பற்றி ஜீவாவிடம் போஸ் வெங்கட் பிட்டு வைப்பது போல் குழப்பமாக உளறியது. ’உங்கள் நேரம் கால …

Travel

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

You must be logged in to post a comment.